சேலம் மாவட்டம், ஏற்காடு டவுன் பகுதியில் உள்ள அலங்கார ஏரியானது, அதை சுற்றிலும் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரி முழுவதும் ஆகாய தாமரைகள், குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. பின்னர் ஏற்காடு பகுதியை சேர்ந்த இளைஞர்கள், சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று ஏற்காடு பகுதி மக்களுடன் இணைந்து, தூர் வாறி ஏரியை ஆழப்படுத்தினர்.
ஏரிக்கரை முழுவதும் மரக்கன்றுகளை நட்டனர். மேலும், ஏரியின் ஒரு புறத்தில் பாறைகள் இருந்த பகுதியில் மண்னை குவித்து, ஆரியம் உள்ளிட்ட சில பயிர் வகைகளை நட்டுள்ளனர். இதனால் இங்கு பறவைகள் தங்கி வாழ்கின்றனர்.
தற்போது ஆழப்படுத்தியதால், ஏரியில் அதிகளவிலான தண்ணீர் இருப்பு உள்ளது.
இந்நிலையில், இன்று ஏற்காடு இளைஞர்கள், ஈச்சங்காடு சலேசியன் கல்லூரி அருட்சகோதரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஏரிக்கரை முழுவதும் உள்ள தடுப்பு சுவருக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுப்பட்டனர்.
இதனால் ஏரிக்கரை முழுவதும் வெண்மையாக காட்சியளிக்கிறது.
–நவீன் குமார்.