இந்திய பிரதமர் நரேந்திர மோதியை, பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜீன்-யவ்ஸ் லெ ட்ரையன் இன்று புது தில்லியில் சந்தித்து பேசினார்.
கடந்த ஜூன் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பிரான்சிற்கு விஜயம் செய்ததற்கு பிறகு, இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-யவ்ஸ் லெ ட்ரையன் எடுத்துரைத்தார்.
உலக சமாதானத்திற்கும், உறுதிப்பாட்டிற்கும் ஒரு சக்தியாக இந்தியா செயல்படுவதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவரிடம் கூறினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.