கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கேக் தயாரிக்கும் திருவிழா, ஏற்காடு ஜி.ஆர்.டி. தங்கும் விடுதியில் நடைப்பெற்றது.

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? ????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

சேலம் மாவட்டம், ஏற்காடு ஜி.ஆர்.டி. தங்கும் விடுதியில் கிறிஸ்துமஸ் திருவிழாவிற்காக 9 -வது ஆண்டாக கேக் தயாரிக்கும் திருவிழா இன்று மாலை நடைப்பெற்றது.

ஹோட்டல் பொது மேலாளர் உமா மகேஸ்வரி முன்னிலையில் நடைப்பெற்ற விழாவிற்கு, செஃப் சிவப்பிரகாஷ் தலைமையிலான ஊழியர்கள் கேக் கலக்கும் விழாவிற்காக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தங்கும் விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளும், ஊழியர்களும் இணைந்து திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா, பேரிட்சை உள்ளிட்ட 30 கிலோ உலர் பழங்களை வைன் உள்ளிட்ட மதுபானங்களுடன்  கலந்தனர். 36 நாட்கள் ஊறவைக்கப்பட்டு பின்னர் மைதா மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்டு 100 கிலோ அளவிலான புட்டிங் கேக் தயாரிக்கப்பட உள்ளது.

தயாரிக்கப்பட உள்ள கேக் ஏற்கட்டில் உள்ள ஆதரவற்றக் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளதாக ஹோட்டல் பொதுமேலாளர் உமா மகேஸ்வரி கூறினார்.

-நவீன்குமார்.