ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு, உச்ச நீதிமன்றம் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட லுக்அவுட் நோட்டீசை திரும்ப பெறும்படியும், தான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும், உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கக் கூடாது என, சிபிஐ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், தனது மகளின் மேற்படிப்பு அட்மிஷனுக்காக லண்டன் செல்ல அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மறுபடியும் மனு அளித்திருந்தார்.
இதனையடுத்து, டிசம்பர் 1- ம் தேதி சென்றுவிட்டு டிசம்பர் 10- தேதிக்குள் இந்தியா திரும்பி விட வேண்டும் என்ற சில நிபந்தனைகளுடன், கார்த்தி சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி! -உத்தரவின் உண்மை நகல்.
News
November 20, 2017 8:23 pm