சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டத்திற்குட்பட்ட பெலாத்தூர் கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கத்தினை ஏற்காடு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சித்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
காலை மற்றும் மாலை என இரு முறை ஏற்காடு பேருந்து நிலையத்தில் புறப்படும் பேருந்து போட்டுக்காடு, காக்கம்பாடி, பில்லேரி, பெலாத்தூர் கிராமங்களுக்கு சென்று பின் அதே வழியில் ஏற்காடு பேருந்து நிலையம் வந்தடையும்.
தார் சாலை வசதி இருந்த போதிலும் பேருந்து வசதி இல்லாமல் இருந்ததால், தற்போது பேருந்து இயக்கம் துவங்கப்பட்டது. மலைக்கிராமங்களை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் அலமேலு மலையன், கோவிந்தன், மலையன், குணசேகரன், விஜய் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.
-நவீன் குமார்.