கடந்த இரண்டு நாட்களில் இலங்கையில் பல்வேறு இடங்களில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 நபர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக மீன்பிடித்தல், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை, உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் குண்டுகள் வைத்திருந்தது… ஆகிய குற்றங்களுக்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-என்.வசந்த ராகவன்.