மணிப்பூர் மாநிலத்தில் ஆண்டு தோறும் நவம்பரின் கடைசி பத்து நாட்களில் “சங்காய் திருவிழா” கொண்டாடப்படுகிறது. இதற்காக மணிப்பூர் மாநில சுற்றுலாத் துறை சங்காய் திருவிழாவை ஏற்று நடத்துகிறது.
மணிப்பூரில் காணப்படும் சங்காய் மானின் நினைவாக சங்காய் திருவிழா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மானை மணிப்பூர் மாநில விலங்காக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த திருவிழாவின் போது உள்ளூரில் தயாரான கைவினைப் பொருட்களும், கலை வேலைப்பாடுகள் நிறைந்த ஓவியங்களும், உணவுகளும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சங்காய் திருவிழாவில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.