திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில் அரசு இ-சேவை மையம் உள்ளது. இங்கு ஆதார் அட்டை திருத்தம் மற்றும் பிளாஸ்டிக் கார்டு பதிவிறக்கம் செய்ய வரும் பொதுமக்களிடம், இங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஆன்லைனில் “சர்வர்” வேலை செய்யவில்லை என்பதையே தொடர்ந்து சொல்லி வருகின்றனர். அன்றாட வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு வரும் படிப்பறிவு இல்லாத ஏழை மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்திவிட்டு அனைத்திற்கும் ஆதார் அட்டை அவசியம் வேண்டும் என்று அடம் பிடிக்கும் மத்திய, மாநில அரசுகள் ஆதார் அட்டைகளை பிழையில்லாமல் அச்சடித்து வழங்குவதற்கும், ஆன்லைனில் அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை உடனுக்குடன் சரிசெய்வதற்கும், எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம்?
ஆன்லைனையே காரணம் காட்டி பொதுமக்களை ஏமாற்றி வரும் அரசு இ-சேவை மைய ஊழியர்களை யார் கண்காணிப்பது? இப்பிரச்சனை இங்கு மட்டுமல்ல; இந்தியா முழுவதும் இதுதான் நிலமை.
ஆதார் அட்டை சாதாரண மனிதனின் அடையாளம் என்று சொல்லிவிட்டு இப்படி அப்பாவி மக்களை அவதிக்கு உள்ளாக்குவது எந்த வகையில் நியாயம்?
ஆதார் அட்டையால் அப்பாவி மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பதை, மத்திய அரசு என்றுதான் உணரப்போகிறதோ தெரியவில்லை.
-ச.ரஜினிகாந்த்.
-மு.ராமராஜ்.
ஆதார் அட்டையால் அவதிப்படும் அப்பாவி மக்கள்!
News
November 27, 2017 7:29 pm