தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் இன்று முதல் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (29.11.2017) உத்தரவிட்டுள்ளது.
77 பக்கங்கள் கொண்ட உயர்நீதிமன்ற உத்தரவின் உண்மை நகலை, நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என, “எம்.ஆர்.எம். ராமையா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற நிறுவனத்தின் சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ராமையா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் இன்று (29.11.2017) தீர்ப்பு வழங்கினார்:
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை இன்று முதல் 6 மாதங்களுக்குள் முழுவதுமாக மூட வேண்டும். புதிதாக எந்த மணல் குவாரிகளையும் திறக்க கூடாது. தமிழகத்தின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் மூலம், தமிழகத்தின் மணல் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். மணல் இறக்குமதிக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
சோதனை சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களை கண்காணிப்பு கேமரா பொருத்தி மணல் கடத்தல் குறித்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் குறிப்பிட்டுள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் இன்று முதல் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும்: உயர்நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.
News
November 29, 2017 3:01 pm