இலங்கை கடற்பரப்பில் 20 இந்திய மீனவர்கள் கைது!

indian fisherman3indian fisherman6indian fisherman4indian fishermanindian fisherman5indian fisherman1indian fisherman2இலங்கை கடற்பரப்பில் கோவைன் பாயின்ட் மற்றும் பருத்திதுறை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 20 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று இரவு (டிசம்பர்-01) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 படகு மற்றும் மீன் பிடி உபகரணங்கள் அனைத்தும் காரை நகர் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு, அதன்பின் சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண உதவி கடற்தொழில் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.