கன்னியாகுமரி மாவட்டத்த்தில் பெய்த கன மழையால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பலத்த புயல் காற்று வீசியதால், கடலோர மக்களின் குடிசை வீடுகளின் மேற்கூரை காற்றில் கிழித்துச் செல்லப்பட்டது. மழை நீர் வீட்டிற்குள் புகுந்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற மீனவர்கள் புயலால் அடித்துச் செல்லப்பட்டனர். மீனவர்கள் கரை திரும்பாததால் கரையோர மக்கள் சாலைகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். கடலோர காவல்படையும், கப்பல்படையும் இணைந்து ஹெலிகாப்டர் மற்றும் கப்பல்கள் மூலம் மீனவர்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் விவசாயிகளின் குறைக்களையும் கேட்டறிந்தார்.
-எஸ். இராவணன்.
-பி.சந்திர குமாரன்.