காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யுமாறு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று வரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை, காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை தாக்கல் செய்தார்.
வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசிப்பெற்றார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித், ஏ.கே.அந்தோணி மற்றும் ஆறு மாநில முதல்வர்களுடன் சென்று ராகுல் காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
ராகுல் காந்தியைத் தவிர வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால், போட்டியின்றி அகில இந்திய காங்கிரசின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதாகஅறிவித்துள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
-எஸ்.சதிஸ் சர்மா.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!
News
December 4, 2017 7:53 pm