கன்னியாகுமரி மாவட்டத்தில், ஓகி புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேத விபரம் கணக்கீட்டு பணிகளை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.
அப்போது, பெரும்பாலான விவசாயிகள் வாய்மொழி குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்து வருவதால், நிவாரணத் தொகை வாய்மொழி குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சென்று சேரும் பொருட்டு கீழ்கண்ட அறிவுரை வழங்கினார்.
சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கிராம நிர்வாக அலுவலரின் சான்றின் அடிப்படையில் அரசு வழங்கும் நிவாரணத் தொகையினை வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.
-சி. வேல்முருகன்.