ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புகார்!

Dr.TAMILISAI -PT -RAJEH LANKANI 2 Dr.TAMILISAI -PT -RAJEH LANKANI

Dr.TAMILISAI -PT -RAJEH LANKANI-1 Dr.TAMILISAI -PT -RAJEH LANKANI-3

சென்னை ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று புகார் அளித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் பண நடமாட்டம் அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவுக்கு புறம்பாக பூத் சிலிப்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடக்காதென்றால், அதை நடத்துவதில் பயனில்லை. அமைச்சர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் பயணம் செய்கின்றனர். தேர்தல் ஆணையத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று,  தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

-சி.வேல்முருகன்.