குஜராத்தில் இறுதி கட்ட தேர்தல் நாளை (14.12.2017) நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன் பிரசாரத்தை முடித்து விட வேண்டும் என்பது தேர்தல் விதி.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தொலைக்காட்சி சேனலுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோதியை அவர் விமர்சித்து பேசியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், குஜராத் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடமும் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் ராகுல் காந்தி பேட்டியை ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், குஜராத் தேர்தல் அதிகாரி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டி குறித்து, விளக்கம் அளிக்கும்படி, ராகுல் காந்திக்கும், இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
ராகுல் காந்தி பேட்டியை ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது வழக்கு!- ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! -உத்தரவின் உண்மை நகல்.
News
December 13, 2017 10:45 pm