குஜராத் மாநில தேர்தலில், தேர்தல் ஆணையம் பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக செயல்படுவதாகவும், இரட்டை வேஷம் போடுவதாகவும் காங்கிரஸ் பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளது.
மேலும், தேர்தல் விதிகளை மீறிய பிரதமர் நரேந்திரமோதி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய தேர்தல் ஆணையரிடம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் புகார் அளித்துள்ளனர்.
இன்று ஆமதாபாத்தில் ஓட்டுப்போட வரிசையில் காத்திருந்த வாக்காளர்களை நோக்கி தனது கைவிரல்களை காட்டிய பிரதமர் நரேந்திரமோதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது.
பிரதமர் நரேந்திரமோதி சபர்மதியில் உள்ள ராணிப் என்ற இடத்தில் அமைந்துள்ள ஓட்டுச்சாவடியில், வரிசையில் நின்று ஓட்டு போட்டார். பின்னர் வெளியே வந்த அவர், தனது வாகனத்தில் கிளம்பி சென்றார். நடந்து சென்ற போது, அங்கிருந்த வாக்காளர்களை நோக்கி தனது கைவிரல்களை காட்டி சென்றார். இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என புகார் கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையம் தனது பணியை செய்யாமல் தூங்கி கொண்டிருப்பதுடன், பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக கூறியுள்ளது.
மேலும், தேர்தல் விதிகளை மீறிய பிரதமர் நரேந்திரமோதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. இந்த விவகாரத்தை ஒட்டி தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
குஜராத் மாநில தேர்தல்: தேர்தல் ஆணையம் இரட்டை வேஷம் போடுகிறது; பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது!- காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு!
News
December 14, 2017 8:51 pm