பகுதிநேர சிறப்பாசிரியர்கள் உரிமை மீட்பு போராட்டம் 27 ந்தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது!

???????????????????????????????

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மமல்லன் திருமண கூடத்தில் பகுதிநேர சிறப்பாசிரியர் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் புவன சுந்தர் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் வேடியப்பன் முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்டதுணை தலைவர் செங்கம் பாடலி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் லோகநாதன் கருத்துரை வழங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

வரும் 27 ந்தேதி சென்னையில் நடைபெறும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மாபெரும் உரிமை மீட்பு போராட்டத்தில் கலந்து கொள்வது எனவும், பெண் பகுதிநேர ஆசிரியர்கள் பாதுகாப்பு, பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தர பணியிடங்களாக அறிவிக்க வேண்டியும், மத்திய அரசு ஊதிய உயர்வு வழங்கியும், மாநில அரசு வழங்கபடாமல் இருப்பதை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தண்டராம்பட்டு ஒன்றிய தலைவர் பார்த்த சாரதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்பழகன் மற்றும் செங்கம் புதுபாளையம் பகுதியைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் செங்கம் கந்தன் நன்றி கூறினார்.

– செங்கம் சரவணக்குமார்.