கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு, முகப்பேர் வேலம்மாள் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம், சிறப்பாக நடைப்பெற்றது. ஆரம்பப் பள்ளி மாணவர்கள் வர்ணக்கோலங்களை கொண்டு கிறிஸ்துவின் பிறப்பினை பிரம்மாண்டமான காட்சிக்களமாக மாற்றியிருந்தனர்.
ஆசிரியர்கள் மெல்லிசைக் குழுவினர் போன்று இன்னிசை பாடல்களை பாடி குழந்தைகளை மகிழ்வித்தனர். மாணவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. கிறிஸ்துமஸ் மரங்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. சிறந்த கிறிஸ்துமஸ் மரத்திற்கானப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.
-மு. ராமராஜ்.