முதலமைச்சரின் குடும்பநல திட்டத்தில் உயர் பிறப்பு வரிசை குறைக்கும் வகையில் தமிழகத்தில் 120 வட்டாரங்களில் உயர் பிறப்பு வரிசை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அவற்றில் சேலம் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களில் ஏற்காடு வட்டாரமும் ஒன்று.
இங்குள்ள மழைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 29 ஆம் தேதி ஏற்காடு, வாழவந்தி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.
உயர் பிறப்பு வரிசை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைப்பெற்றது. பேரணியை, மருத்துவ துறை துணை இயக்குனர் மருத்துவர் வளர்மதி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் மக்கள் தொகை வல்லுனர் ஜெகநாதன், வட்டார மருத்தவ அலுவலர் உஷா ஆகியோர் பேரணியை தலைமையேற்று வழிநடத்தினர்.
குடும்பநலத்துறை, சுகாதார துறை, மருத்துவ துறை ஊழியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் என 80-க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.
பேரணி ஏற்காடு காந்தி பூங்காவில் துவங்கி, கடை வீதி, பஸ் நிலையம், ஜெரீனாக்காடு, எம்.ஜி.ஆர். நகர், படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து, சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடும்பநல அறுவை சிகிச்சை விளக்க அரங்கத்தில் நிறைவைடைந்தது. அங்கு மக்களுக்கு குடும்பநல அறுவை சிகிச்சை குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
-நவீன் குமார்.