திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், செம்மங்குடி ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வர் கோயிலில் சனிபெயர்ச்சி விழா நடைபெற்றது.
திருவாரூர் – கும்பகோணம் சாலையில் குடவாசல் அருகில் உள்ளது செம்மங்குடி. சங்கீத வித்வான் செம்மங்குடி சீனிவாச அய்யர் பிறந்த ஊரான இங்கு, ஸ்ரீ ஆனந்த வல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வர் ஆலயத்தில் சனிபெயர்ச்சி விழாவினை முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் நவக்கிரஹ ஹோமம் நடைபெற்றது.
செம்மங்குடி ஏகாம்பர குருஜி தலைமையில் இன்று காலையில் துவக்கப்பட்ட லட்சார்ச்சனை மாலை ஆறு மணி வரை தொடர்ந்து சிவாச்சாரியார் ஹரிஹர சிவன் அவர்களால் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
மாலை ஆறுமணிக்கு நவக்கிரஹ ஹோமம் நடைபெற்று, பூர்ணாஹுதி நிறைவேற்றப்பட்டது.. பின் அதனை தொடர்ந்து சனீஸ்வரனுக்கு அலங்காரம் செய்து, அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
-ஜி. ரவிச்சந்திரன்.
செம்மங்குடி ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வர் கோயிலில் சனிபெயர்ச்சி விழா!
News
December 19, 2017 11:37 pm