1513572957_30th_Covocation_(18-12-17)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் 30-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக மாநில ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் இந்த விழாவில் பங்கேற்று நேரடியாக 295 மாணவ, மாணவிருக்குப் பட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பேராசிரியர் டி.பி.சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பல்கலைக்கழத்தின் பல்வேறு துறைகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகள், தொலைதூரக் கல்வி ஆகியவற்றின் மூலம் பயின்ற மொத்தம் 32 ஆயிரத்து 787 பேர் பட்டம் பெற்றனர்.
-கே.பி.சுகுமார்.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டு, சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் வரவேற்று, வழியனுப்பி வைத்தனர்.
-எஸ்.ஆனந்தன்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 30-ஆவது பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார்.
News
December 20, 2017 11:24 pm