திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் வேங்கூர் விவேக் மற்றும் அவரது உறவினர் இருவர் உட்பட 3 பேர் கைது!

IMG_20171221_210550_486IMG-20171221-WA0058IMG-20171221-WA0064 IMG-20171221-WA0063

அரசியில் கட்சியில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசையில் செயின் பறிப்பு, வழிபறி, திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்ட ஜான் பாண்டியன் தலைமையில் செயல்பட்டு வரும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் வேங்கூர் விவேக் மற்றும் அவரது உறவினர் இருவர் உட்பட 3 பேரை திருவெறும்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருநாதன் மகன் விவேக் ( வயது 27), இவர் ஜான் பாண்டியன் தலைமையில் செயல்பட்டு வரும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வந்தார்.

இவரது  உறவினரான ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் மேலப்பச்சேரியை சேர்ந்த தமிழரசன் மகன் பாலகுமரன்   (வயது22) என்பவருடன் சேர்ந்து, திருவெறும்பூர்  நவல்பட்டு ரோட்டில், திருவெறும்பூர் அருகே உள்ள சுருளிகோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது47) என்பவரிடம கத்தியை காட்டி மிரட்டி ரூ. 2 ஆயிரம் பணம் பறித்துள்ளனர்.

இதுசம்மந்தமாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் செய்ததின் அடிப்படையில் திருவெறும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  வேங்கூரை சேர்ந்த குருநாதன் மகன் விவேக் மற்றும் அவரது உறவினரான பாலகுமாரனை பிடித்து விசாரித்தனர்.

பாலகுமாரன் திருச்சியில் உள்ள ஒரு பொறியில் கல்லூரியில் டிப்பளமோ படித்து வருவது அப்போது தெரியவந்தது.

மேலும், அவர்களிடம் தொடர்ந்து விசாரனை நடத்தியதில், வேங்கூரை சேர்ந்த விவேக்கின் மைத்துனர் சேகர் மகன் வினோத் (வயது17) இவரும் ஒரு தனியார் பொறியில் கல்லூரியில் டிப்பளமோ மெக்கானிக்கல் முதலாமாண்டு படித்து வருகிறார் என்பது தெரியவந்தது.

இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து திருவெறும்பூர் மற்றும் திருச்சி சுற்று வட்டார பகுதிகளில் வழிபறி, செயின் பறிப்பு திருட்டு மற்றும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும், சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடித்திருக்கும் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் 3 பேரிடமும் விசாரணை செய்ததில், வேங்கூர் விவேக் அவரது மைத்துனர் மகன் வினோத் மற்றும் தம்பி உறவினரான அல்லூரை சேர்ந்த பாலகுமாரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து திருவெறும்பூர் மற்றும் திருச்சி சுற்று வட்டார பகுதிகளில், காரில் சென்று பகலில் பூட்டியிருக்கும் வீடுகளை அடையாளம் பார்த்து கொள்வதும், பின்னர் இரவு நேரங்களில் காரில் சென்று அந்த வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பேர் மட்டும் வீட்டின் உள்ளே சென்று கொள்ளையடிப்பதும், ஒருவர் காரில் இருந்து கொண்டு யாரேனும் வருகிறார்களா என்பதை பார்த்து தகவல் சொல்வது,  இப்படி 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் 100 பவுனுக்கு மேல் தங்க நகை மற்றும் பல லட்ச ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துள்ளதை ஒப்பு கொண்டனர்.

அதன் அடிப்படையில், அவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்திய கார் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை திருவெறும்பூர் காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, மலைக்கோவில் பகுதியில் உள்ள ஆனந்த் என்பவர் வீட்டில் கொள்ளையடித்த 14 பவுன் உட்பட 100 பவுனுக்கும் மேல் தங்க நகை மற்றும் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், நகைகளை பறிகொடுத்தவர்களிடம்  காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விவேக் மற்றும் பாலகுமரனை திருச்சி 6-வது குற்றவியல் நீமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வினோத்துக்கு 17 வயது என்பதால் அவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு  அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த  3 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரணை செய்ய திருவெறும்பூர் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் உத்தவின் பேரில், திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் குருநாதன் மகன் விவேக் நீக்கப்பட்டுள்ளதாக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தே.சக்திவேல் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

-ஆர்.சிராசுதீன்.