சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொளகூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ராமர் மனைவி சுபாஷினி (வயது 20) என்பவருக்கு பிரசவ வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கிடைத்து, 108 ஆம்புலன்ஸ் கொளகூர் கிராமத்திற்கு சென்றது. ஆம்புலன்ஸை ஓட்டுனர் சிவப்பிரகாசம் ஓட்டியுள்ளார்.
ஆம்புலன்ஸ் கரடியூர் கிராமம் அருகே வந்தபோது, சுபாஷினிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், மருத்துவ உதவியாளர் சிகாமணி, சுபாஷினிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். சுபாஷினிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நல்ல நிலையில் நாகலூர்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.
-நவீன்குமார்.
ஆம்புலன்சில் பிறந்த குழந்தை!
News
December 24, 2017 10:11 pm