பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பாரத பிரதமருமான வாஜ்பாயின் 93-வது பிறந்த நாளை நாடு முழுவதும் இன்று கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய பாஜக சார்பில் நவல்பட்டு, அண்ணா நகரில், முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் 93-வது பிறந்த நாள் விழா, திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைப்பெற்றது. பொதுச்செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் பூமிநாதன், கருணாநிதி, செல்வதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி மாவட்ட செயலாளர் சிட்டிபாபு, மாநில அணி செயலாளர் இந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.
-ஆர்.சிராசுதீன்.