திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், வட மனப்பாக்கம் கிராமத்தில் புதிதாக சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் நிறைவடையாமல் உள்ளதால், சாலையில் போடப்பட்டுள்ள கிரஷர் தூள் காற்றில் பறந்து, சாலை மற்றும் எதிரில் வரும் வாகனங்கள் மீது படர்கிறது. இதனால் சாலையில் பயணம் செய்யும் பயணிகளும், சாலை ஓரம் வசிக்கும் மக்களும் சுவாசிக்க முடியாமல் அவதிபடுகின்றனர். எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சம்மந்தபட்ட அதிகாரிகள் இந்த சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-ச.ரஜினிகாந்த்.
சாலையில் போடப்பட்டுள்ள கிரஷர் தூள் காற்றில் பறப்பதால் பயணிகள் அவதி!
News
December 26, 2017 11:40 am