சேலம் மாவட்டம், மேச்சேரி, செங்கரடு பகுதியை சேர்ந்த பெரியான் மகன் வசந்த குமார்(வயது 26) என்பவர், அவரது உறவினர் குப்புசாமி மகன் சுதாகர் (வயது 19), என்பவரையும் அழைத்துக்கொண்டு ஏற்காட்டை சுற்றி பார்க்க தனது ராயல் என்ஃபீல்ட் பைக்கில் ஏற்காடு மலைப்பாதையில் வந்துக்கொண்டிருந்தார்.
ஏற்காடு அடிவாரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் மலைப்பாதையில் சென்றுக்கொண்டிருந்தபோது, எதிரில் வந்த ஹெச்.பி.பெட்ரோலியம் டேங்கர் லாரியில் பைக் மோதியது. இதில் வசந்தகுமார் மற்றும் சுதாகர் இருவரும் மயக்கமடைந்தனர். டேங்கர் லாரியை ஏற்காட்டை சேர்ந்த செந்தில்குமார் ஓட்டி வந்தார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வசந்தகுமார் உயிரிழந்தார். சுதாகருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
-நவீன்குமார்.
ஏற்காடு மலைப்பாதையில் விபத்து!-பைக் – டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இளைஞர் பலி.
News
December 26, 2017 7:08 pm