குஜராத் பாரதிய ஜனதா கட்சியின் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோதி முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில், குஜராத்தின் முதலமைச்சராக விஜய் ரூபானியும், துணை முதலமைச்சராக நிதின் படேல் மற்றும் 20 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இந்த பதவியேற்பு விழாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
-எஸ்.சதிஸ் சர்மா.
குஜராத் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார்.
News
December 26, 2017 8:52 pm