தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வாயிலாக கல்விக் கடன் முகாம் திருவாரூரில் நடைபெற்றது.

DSC07227 DSC07214 DSC07202

திருவாரூர் மாவட்ட பள்ளிக் கல்வி துறையின் சார்பாக 12 – ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர்களது உயர் கல்வியினை தொடரும் வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வாயிலாக திருவாரூர் மாவட்ட முன்னோடி வங்கியான  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைந்து மாவட்டம் தழுவிய கல்விக் கடன் வழங்கப்பட்டது.

இந்த கல்விக் கடன் முகாமை திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். சக்திமணி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு கல்விக்கடனை வழங்கினார். இந்த முகாமில் 42 வங்கிகள் மூலம் 81 வகையான கல்விக் கடன் வழங்கப்பட்டது.

முன்னதாக திருவாரூர் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளரும் அனைத்து வங்கிகளின் ஒருங்கிணைப்பாளருமான எழிலரசன் கடன் பெறுவதற்கான விதிமுறைகள் பற்றிய வழிக்காட்டுதல் பயிற்சி விளக்கங்களை பயனாளிகளுக்கு தெளிவுப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தின் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள், மாணாக்கர்களுடைய பெற்றோர்கள், மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.   

-ஜி.ரவிசந்திரன்.