திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், தூசி கிராமத்தில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட முயற்சி நடைப்பெற்று வருகிறது. இதற்காக அரசினர் உயர்நிலைப்பள்ளி முன்பு உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தை தேர்வு செய்துள்ளனர்.
இதே கிராமத்தில் பழைய சுகாதார நிலையம் உள்ளது. அதை இடித்து விட்டு, புதியதாக அதே இடத்தில் கட்டினால் நல்லது. இல்லையென்றால், இதே ஊரிலே இருக்கும் பழைய போலிஸ் நிலையத்தை இடித்து விட்டு, அந்த இடத்தில் சுகாதார நிலையம் கட்டலாம்.
இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, பள்ளி விளையாட்டு மைதானத்தை தேர்வு செய்துள்ளனர். இதற்கு இதே கிராமத்தைச் சேர்ந்த செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன்தான் காரணம் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
பள்ளிக்கூடத்திற்கு முன்பு, அதுவும் பள்ளி விளையாட்டு மைதானத்திலேயே சுகாதார நிலையம் கட்டினால், எதிர் காலத்தில் மாணவ, மாணவிகளுக்கு அது இடையூறாக அமையும். சம்மந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா?
-மு. ராமராஜ்.
– ச. ரஜினிகாந்த்.
பள்ளி மைதானத்தை ஆக்கிரமித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட முயற்சி!
News
December 27, 2017 10:06 pm