திருவாரூர் திரு.வி.க அரசு கலை கல்லூரியில் கணித மேதை இராமானுஜம் அவர்களின் 139- வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
டிசம்பர் 22- தேதி கணித மேதை இராமனுஜம் அவர்களின் பிறந்த நாளை தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து இன்று (28.12.2017) அவருடைய 139-வது பிறந்த நாள் விழா திருவாரூர் திரு.வி.க அரசு கலைகல்லூரி கணிதத்துறையின் சார்பாக கொண்டாடப்பட்டது.
இக்கல்லூரியின் கணிததுறை தலைவர் சண்முக வடிவு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கணித துறையை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கணிதத்தில் கணித மேதை இராமானுஜர் ஆற்றிய பங்கினை பற்றியும், அதன் சிறப்பினை பற்றியும் எடுத்து கூறினர்.
அதற்கு முன்னதாக கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ராஜேந்திரன் நிகழ்ச்சினை துவக்கி வைத்து மாணவ, மாணவியர்களிடையே உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் நாகேந்திரன், ஹேமாமாலினி, அறிவொளி மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
-ஜி.ரவிச்சந்திரன்.
கணித மேதை இராமானுஜம் அவர்களின் 139- வது பிறந்தநாள் விழா!
News
December 28, 2017 10:06 pm