திருச்சி, திருவெறும்பூரில் உள்ள நகை அடகு கடை உரிமையாளரை, மன்னார்குடி போலீசார் மிரட்டுவதாக திருவெறும்பூர் வியாபாரிகள் சங்கம் மற்றும் நகை அடகு கடை உரிமையாளர் சங்கம் சார்பில், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
திருவெறும்பூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 43), இவர் திருவெறும்பூர் நவல்பட்டு ரோட்டில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 29-ம் தேதி வந்த மன்னார்குடி போலீசார், அங்கு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்த குற்றவாளியை அழைத்து வந்து இவர் உன்னிடம் நகை விற்றுள்ளார். அந்த நகை திருட்டு நகை அதனால் அதனை கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.
அதற்கு கணேசன் இங்கு தெரியாத நபர்களிடம் நகை அடகு வாங்குவது இல்லை. மேலும், இங்கு நகை விற்பதோ, வாங்குவதோ கிடையாது என்று கூறியுள்ளார். அப்போது அந்த குற்றவாளி தானும் இந்த கடையில் விற்கவில்லை என்று கூறியதாகவும், அதனால் மன்னாகுடி போலீசார் திரும்ப சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கணேசனை பிடித்து செல்வதற்காக நேற்று அதிகாலையே மன்னார்குடி போலீசார் கணேசனின் வீட்டின் அருகே காத்திருந்தனர். ஆனால், கணேசன் வெளியூர் சென்றுள்ளதால் வரவில்லை. இந்நிலையில் மன்னார்குடி போலீசார் அவரது மனைவி மல்லிகாவிடம் கணேசன் எங்கே அவரை விசாரிக்க வேண்டி உள்ளது வரசொல்லுங்கள் என்று கூறி சென்றுள்ளனர்.
இதுக்குறித்து கணேசனின் மனைவி திருவெறும்பூர் நகை அடகு கடை உரிமையாளர் சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில், திருவெறும்பூர் வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜேஷ், இணைச்செயலாளர் இக்பால், அடகு கடை உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அண்ணாமலை, ராமநாதன் மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் மன்னார்குடி போலீசார் மிரட்டி வருவது குறித்தும், அதனை விசாரணை செய்து நடடிவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று புகார் மனு கொடுத்துள்ளனர்.
-ஆர்.சிராசுதீன்.
திருவெறும்பூரில் உள்ள நகை அடகு கடை உரிமையாளரை, மன்னார்குடி போலீசார் மிரட்டுவதாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார்!
News
December 31, 2017 3:16 pm