ஏற்காட்டில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி!

????? ???????? ???????????, ??????? ????????????? ????? ????????????. ????? ???????? ???????????, ??????? ????????????? ????? ????????????. 31slmnav01

சேலம் மாவட்டம், ஏற்காட்டில், எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைப்பெற்றது. சேலம் மாவட்ட ஹெச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊழியர்கள் மற்றும் தன்னார்வாலர்கள் கலந்துக்கொண்ட இம்முகாம் ஏற்காடு அரசு மருத்துவமனையில் ஊழியர்களின் உறுதி ஏற்பு நிகழ்ச்சியுடன் துவங்கியது. அவர்கள் சேலம் மாவட்டத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்துவது என உறுதி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் மாவட்ட திட்ட மேலாளர் அருணாச்சலம் மற்றும் ஏற்காடு அரசு மருத்துவர் குமார், செல்வம் ஆகியோர் தலைமையில் பேரணி துவங்கி ஒன்டிக்கடை பகுதியில் உள்ள அண்ணா பூங்கா பகுதியில் நிறைவடைந்தது. பின்னர் படகு இல்லம், அண்ணா பூங்கா, பஸ் நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி பகுதி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட 5 இடங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டு, எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. இப்பேரணி மற்றும் முகாமில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் தன்னார்வாலர்கள் கலந்துக்கொண்டனர்.

-நவீன் குமார்.