பேருந்து கட்டணக் குறைப்பு விவகாரம்!-அரசு உத்தரவை மதிக்காத பேருந்து நடத்துனர்கள்.

அரசு உத்தரவை மதிக்காத பேருந்து நடத்துனர்.

கடந்த 20.01.2018 அன்று தமிழக அரசு அதிரடியாக பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. உயர்த்திய பேருந்து  கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி அரசியல் கட்சிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்து 28.01.2018  அன்று அரசாணை வெளியிட்டது. இந்நிலையில், இன்று (29.01.2018) முதல் குறைக்கப்பட்ட பேருந்து கட்டணம் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.

ஆனால், பல இடங்களில் அதே கட்டணத்தைத்தான் அரசு பேருந்து நடத்துனர்கள் வசூலிக்கின்றனர். இதனால் பயணிகளுக்கும், பேருந்து நடத்துனர்களுக்கும் வாக்கு வாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட பேருந்து கட்டணம் தொடர்பாக பயணிகள் கேட்கும் சந்தேகங்களுக்கும், விபரங்களுக்கும் பேருந்து நடத்துனர்களால் முறையாக விளக்கம் அளிக்க தெரியவில்லை. இதனால் தமிழக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.

தமிழக அரசு உத்தரவை மதிக்காத பேருந்து நடத்துனர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

-ச.ராஜா.

Leave a Reply