சவூதியில் இருந்து மீட்கப்பட்ட தமிழக வாலிபர் கனகராஜ் குடும்பத்தினர், திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

திருவாரூர் மாவட்டம், சேந்தங்குடியை சேர்ந்த கனகராஜ் என்பவர், கடந்த 22.11.2017 அன்று சவூதி அரேபியா நாட்டிற்கு வேலை பார்க்கச் சென்றார். சென்ற இடத்தில் பல கொடுமைகளுக்கு உள்ளானார். தன்னை மீட்க கோரி திருவாரூர் மாவட்டக் காவல் துறையின் “ஹலோ போலீஸ்” என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு வீடியோ அனுப்பியதை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனம் உத்தரவின் பேரில் குற்றப்பதிவேடுகள் காப்பகத் துணை கண்காணிப்பாளர் பலுலுல்லாஹ் துரித முயற்சியினால் கடந்த 26.01.2018 அன்று சவூதி அரேபியாவிலிருந்து கனகராஜ் மீட்கப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில், கனராஜின் குடும்பத்தினர், திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்தனர்.

திருவாரூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “ஹலோ போலீஸ்” என்ற வாட்ஸ் ஆப் எண் மூலம் இது போன்று பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் ஏதாவது பிரச்சனை என்றால் 8300087700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

-க.மகேஸ்வரன்.

Leave a Reply