திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சி பெண் பில் கலெக்டரை கடத்திய வழக்கில் கைது செய்யபட்ட 4 பேர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், அவரது அக்கா சரஸ்வதி மற்றும் டூ வீலர் மெக்கானீக் நோவா ஆகியோரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
திருச்சி, பீமநகர், நீயூ ராஜா காலனி நெ.14 S4 பெனாசிர் அடுக்குமாடி குடியிருப்பில் தற்போது வசித்து வரும் சரஸ்வதி(36), தனது கணவர் மதுரை வீரனுடன் மனகசப்பு ஏற்பட்டு பிரிந்து வந்துவிட்டதாகவும், பின்னர் முன்னாள் தொழில் அதிபர் கணேசன் என்பவரை மணந்து வாழ்ந்து வருவதாகவும், அவர் தற்போது சென்னையில் உள்ளார் என்றும், இதற்கிடையில் கணேசனுடன் தன் தங்கை புவனேஷ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், அதனை சரஸ்வதி கண்டித்ததாகவும், ஆனால், புவனேஷ்வரி கேட்கவில்லை என்றும், இந்நிலையில் திருச்சி நெ.39A, கஜபதி புது தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் நோவா(35), பீமநகரில் டூ விலர் மெக்கானீக் ஒர்க் ஷாப் வைத்திருப்பதாகவும், அவருடன் தனக்கு அறிமுகம் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் புவனேஷ்வரியை மிரட்ட சொன்னதாகவும், சரஸ்வதி காவல்துறையினரிடம் இன்று வாக்கு மூலம் அளித்துள்ளார்.
நோவா மெக்கானீக் பட்டறைக்கு வேலைக்கு டூ வீலரை கொண்டு வந்து விடும் போது முனீஸ்வரனோடு பழக்கம் நோவாவிற்கு ஏற்பட்டதாகவும், அதன் அடிப்படையில் நோவா மூனீஷ்வரனிடம் புவனேஷ்வரியை மிரட்டுமாறு கூறியதாகவும், அதன் அடிப்படையில் அவர்கள் புவனேஷ்வரியை கடத்தியது காவல்துறை விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
இதுசம்மந்தமாக சரஸ்வதி மற்றும் நோவா ஆகிய இருவரையும் துவாக்குடி காவல்துறையினர் கைது செய்து திருச்சி 6-வது குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.
கள்ளத் தொடர்பால் ஏற்பட்ட பிரச்சனை, இத்தனை நபர்களை கம்பி என்ன வைத்துள்ளது. சேர்மானம் சரியில்லை என்றால் நிச்சயம் அவமானத்தை சந்தித்தே ஆக வேண்டும்.
-ஆர்.சிராசுதீன்.