திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கல்லணை சாலை பிரிவு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில், திருச்சி ராமமூர்த்தி நகரை சேர்ந்த ஜெயராமன்(52), தனக்கு சொந்தமான மினி பஸ்சை நிறுத்தியுள்ளார். அதேப்போல் திருவெறும்பூர்பகுதியை சேர்ந்தவர்கள் டிரைலர் லாரிகள் மற்றும் ஒரு ஜேசிபி இயந்திரத்தை நேற்று இரவு நிறுத்திவிட்டு இன்று காலை வந்து பார்த்தப்போது, மினி பஸ்சில் இருந்த இரண்டு பேட்டரிகள், 2 டிரைலர்களில் இருந்த 4 பேட்டரிகள், ஜேசிபி இயந்திரத்தில் இருந்த ஒரு பேட்டரி என 7 பேட்ரிகளை மர்ம நபர்கள் திருடிசென்றிருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் நடைப்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
எனவே, திருச்சி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணித்தால் மட்டுதான் குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும்.
-ஆர்.சிராசுதீன்.