போக்குவரத்து ஆய்வாளர் எட்டி உதைத்ததால், சாலையில் விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷா! -உண்மையில் என்ன நடந்தது?-முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.

கர்ப்பிணி பெண் உயிர் பலிக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ்.

வாகனச் சோதனையின்போது நிறுத்தாமல் சென்ற இருசக்கர வாகனத்தை, திருச்சி, திருவெறும்பூர். கணேசபுரம் பெல் ரவுண்டானா அருகே போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்று எட்டி உதைத்ததால், சாலையில் விழுந்த உஷா என்ற கர்ப்பிணி பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து திருச்சி பாய்லர் பிளாண்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்திய தண்டணை சட்டம் பிரிவு 304 (2) அசட்டையினால் மரணம் விளைவித்தல், இந்திய தண்டணை சட்டம் பிரிவு 336 – மனித உயிருக்கு அபாயம் ஏற்படுத்துதல் (முரட்டுத்தனமான அல்லதுஅசட்டையான செய்கை), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply