தேர்தல் அதிகாரியை காணவில்லை, அ.ம.மு.க – வினர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார்.

திருவெறும்பூர் பகுதியில் நடைப்பெற வேண்டிய கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி வராத காரணத்தினால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு தேர்தல் அதிகாரிகளை காணவில்லை என திருவெறும்பூர் இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுத்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை 4 கட்டமாக நடத்துவதாக அறிவித்திருந்தது, அதன்படி முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த 26ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. முதல் கட்ட தேர்தல் வரும் 2ம் தேதி தேர்தல் நடைபெறகிறது.

இந்நிலையில், திருவெறும்பூர் பகுதியில் உள்ள கூத்தைப்பார் மற்றும் நடராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல்  இரண்டாவது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 31 2018 ம் தேதியுடன் முடியகூடிய நிலையில் தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு வராததால் வேட்புமனு தாக்கல் செய்யமுடியாமல் அ.ம.மு.க – வினர் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தராஜ் தலைமையில் கூத்தைப்பார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு மற்றும் தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இரண்டாம் கட்ட தேர்தல்  வரும் ஏப்ரல் 7ம் தேதி நடைப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  விசாரணையில்,  தேர்தல் நடத்தாமல் அ.தி.மு.க – வினரை நியமனமாக தேர்ந்தெடுக்க முடிவு செய்து விட்டதாகவும் அதனால் தான் தேர்தல் அதிகாரி வரவில்லை என்றும் கூறப்படுகிறது

மேலும் நேற்று மாலை வரை தொடக்க வேளாண்மை கூட்டறவு கடன் சங்கத்திற்கு வராத தேர்தல் அதிகாரியை காணவில்லை, அவர்களை கண்டு பிடித்து தரும்படி ஆனந்தராஜ் தலைமையில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் மதனிடம் புகார் மனு அளித்தனர்.

இதேப்போல் நடராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருவெறும்பூர் ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாதுரை தலைமையில் கட்சி நிர்வாகிகள் உள்ளிருப்பு மற்றும் தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply