திமுக தலைவர் மு.கருணாநிதி வீட்டில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு விருந்து!

மத்தியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.வுக்கு மாற்றாக 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருகிறார். 

இந்நிலையில், இன்று சென்னை வந்த தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் மு.கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

கோபாலபுரத்தில் சந்திரசேகர ராவை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இந்த சந்திப்புக்கு பிறகு, மு.க.ஸ்டாலினை சந்தித்து 3-வது அணி குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

அதன் பின் திமுக தலைவர் மு.கருணாநிதி வீட்டில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply