அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 14 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இல.நிர்மல் ராஜ்; குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

 

திருவாரூர் மாவட்டம், பனங்குடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 14 வகுப்பறை, அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றை இன்று(02.07.2018) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் இல.நிர்மல்ராஜ் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டு தெரிவித்தாவது..

திருவாரூர் மாவட்டம் பனங்குடி அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு 14 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 02.03.2016 அன்று அரசாணை வெளியிடப்பட்டு கட்டுமான பணிகள் துவக்கப்பட்டு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு மாணவ மாணவிகள் பயன்பாட்டிற்கு இன்று திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல் எரவாஞ்சேரி, நீடாமங்கலம் அரசினர் மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.542.13 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிவறை, சுற்றுசுவர் கட்டி முடிக்கப்பட்டு இன்று (02.07.2018) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மிதிவண்டி நிறுத்தும் இடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. பனங்குடி, எரவாஞ்சேரி, நீடாமங்கலம் மற்றும் சுற்றுபுற கிராம மாணவ மாணவிகள் மேல்நிலை கல்வி பயில ஏதுவாக அமைந்துள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, திருவாரூர்; மாவட்ட செயற்பொறியாளர் எஸ்.ரகுநாதன், உதவி செயற்பொறியாளர்  எஸ்.சிங்காரவேலு, வட்டாட்சியர் பரஞ்ஜோதி, தலைமை ஆசிரியர் முரளி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன் மற்றும் அரசு அலுவலர்கள் பள்ளி மாணவ,மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜி. ரவிச்சந்திரன்.

Leave a Reply