ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் ஆரோக்கிய ராஜீவ்க்கு 30 லட்சம் ஊக்க தொகை!-தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி அறிவிப்பு.

ஆரோக்கிய ராஜீவ்

ஆரோக்கிய ராஜீவ்.

ஆசிய விளையாட்டு போட்டி கலப்பு குழு தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வீரர் ஆரோக்கிய ராஜீவ்க்கு தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத் தொகையை அறிவித்து, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தா மற்றும் பலேம்பங்கில் நடந்துவரும் ஆசிய விளையாட்டு போட்டியின் கலப்பு தொடர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகளையும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஊக்கத் தொகையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு முதல் அறிவித்திருந்தார்.

அதன்படி, ஆசிய போட்டியின் கலப்பு குழு தொடர் ஓட்டப்போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவ்க்கு ரூ. 30 லட்சம் ஊக்கத் தொகை தமிழக அரசு சார்பில் வழங்கப்படும். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு தமது வாழ்த்துக் கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

ஆரோக்கிய ராஜீவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள். (File Photo)

ஆரோக்கிய ராஜீவ், திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்துள்ள வழுதியூரை சேர்ந்த ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

-எஸ்.திவ்யா.

Leave a Reply