திருச்சி, ஜங்சன், எல்.ஐ.சி அலுவலகம் அருகில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மெயின் கிளை உள்ளது. அங்கு 24 மணி நேரம் இயங்க கூடிய ATM / CDM இயந்திரங்கள் உள்ளது. இந்த பண பரிவர்தனை மையத்தில் உள்ள இயந்திரங்கள் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த ஏ.டி.எம் வாசலில் ஒரு தெரு நாய் அடிக்கடி படுத்து உறங்குகிறது. இதனால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் நாய் கடித்து விடும் என்று அஞ்சுகின்றனர். 24 மணி நேரமும் CCTV CAMERA-வின் கண்காணிப்பில் இயங்கி வரும் இம்மையமே இந்த லட்சணத்தில் இருந்தால், மற்ற ஏ.டி.எம் மையங்கள் எந்த லட்சணத்தில் இருக்கும்?
– துரை திரவியம்.
புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள காவலாளி…