முதலாமாண்டு மாணவர்களை வரவேற்ற திருச்சி தேசியக் கல்லூரி நிர்வாகம்!

திருச்சி தேசியக் கல்லூரியின் உள்விளையாட்டு மைதானத்தில், இளநிலை முதலாமாண்டு மற்றும் முதுநிலை முதாலாமாண்டு மாணவர்களுக்கு இன்று காலை 09.30 மணிக்கு கல்லூரி திறக்கப்பட்டது. இதல் சுமார் 1500 –க்கும் மேற்;பட்ட மாணவ, மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

விழாவின் தொடக்கமாக, கல்லூரியின் செயலர் கே.ரகுநாதன், முதல்வர் ஆர்.சுந்தரராமன், தேர்வு நெரியாளர், துணை முதல்வர்கள் மற்றும் புலன் முதன்மையர்கள், மேலும் புது மாணவ, மாணவியுடன் ஒரு பெற்றோரும் குத்து விளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.

வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் ஆர்.சுந்தரராமன் வரவேற்று, கல்லூரியின் சிறப்பு அம்சங்களைப் பற்றி எடுத்துரைத்தார். மாணவ, மாணவிகளை நன்கு படிக்குமாறு வலியுறுத்தினார்.

இம்மாதம் 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை புது மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறினார்.

பேராசிரியர் முனைவர் சா. நீலகண்டன் கல்லூரியின் வரலாற்றினை புது மாணவர்களுக்கும், அவர் தம் பெற்றோர்களுக்கும் எடுத்துரைத்தார்

மாணவர்களுக்கான கூட்டம் முடிந்து, பெற்றோர்களுக்கான கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தினை பேராசிரியர் முனைவர் புவனேஸ்வரி தொகுத்து வழங்கினார்.

டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

 

 

Leave a Reply