மத்திய அரசை கண்டித்து திருச்சி பெல் (BHEL) தொழிற்சங்க கூட்டுக் குழு கண்டனப் பேரணி!

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் (BHEL) அனைத்து தொழிற்சங்கம் சார்பில், சேலம் உருக்காலை மற்றும் அதனை சார்ந்த இரண்டு தொழிற்சாலைகளை  தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் உத்தரவை கண்டித்து, பெல் (BHEL) நிறுவன மெயின் கேட்டில் இருந்து திருவெறும்பூர் வரை பெல் அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் தீபன் தலைமையில் நடைப்பெற்ற கண்டனப் பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply