போலி ஏ.டி.எம். கார்டுகளை தயார் செய்த பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர்களை கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டு!

சென்னை கண்ணகி நகரில் போலி ஏ.டி.எம். கார்டுகளை தயார் செய்த பல்கேரிய நாட்டைச் சேர்ந்த 3 பேரை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .கா.விசுவநாதன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Hotel Holiday Inn

சென்னை, கண்ணகிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய மகாபலிபுரம் சாலை, ‘Hotel Holiday Inn’ என்ற ஹோட்டலில் வெளிநாட்டைச் சேர்ந்த சில சந்தேக நபர்கள் தங்கியிருப்பதாக காவல்துறையினக்கு கிடைத்த தகவலின்பேரில், J-11 கண்ணகிநகர் காவல் நிலைய தனிப்படையினர் மேற்படி ஓட்டலில் ரகசியமாக கண்காணித்து விசாரணை செய்ததில், மேற்படி ஓட்டலில் தங்கியிருந்த பல்கேரிய நாட்டைச் சேர்ந்த நபர்கள் அதிக எண்ணிக்கையில் ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. ஓட்டல் அறைக்குள் திடீரென நுழைந்து காவல் குழுவினர் விசாரணை செய்தபோது, அவர்களது பெயர்:

1.போக்ஸ் ,வயது-30, பல்கேரியா

2.நிக்கோலையா, வயது-30, பல்கேரியா

 3.லுபோமிர், வயது-33,  பல்கேரியா

என்பதும், பேரும் ஏ.டி.எம். கார்டுகளின் விவரங்களை கொண்டு போலி ஏ.டி.எம். கார்டுகளை தயார் செய்ததும் தெரியவந்தது. அதன்பேரில் 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர், மேற்படி அறையிலிருந்து 49 ஏ.டி.எம். கார்டுகள், ஸ்கிம்மர் இயந்திரம்-2, இந்திய பணம் ரூ.7,45,000/-, அமெரிக்கா டாலர் 135 கரன்சிகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேற்படி போலி ஏ.டி.எம். கார்டுகளை தயார் செய்த கும்பலைச் சேர்ந்த பல்கேரியர்களை கைது செய்த J-11 கண்ணகி நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வீரகுமார், காவல் உதவி ஆய்வாளர்கள் பாலமுருகன், பிரேம்குமார், தலைமைக் காவலர்கள் உதயகுமார் (த.கா.35820), ரத்னகுமார் (.கா.35793), யாசர் அராபத் (.கா.24020) சிவபாலன், (.கா.32295) மற்றும் காவலர் சக்திகுமார் (எண்.43258) ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .கா.விசுவநாதன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply