திருச்சியில் காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட அச்சக உரிமையாளர்கள் சங்கம், காகித வணிகர்கள் நல சங்கம் மற்றும் ராயல் பேர்ல் மருத்துவமனை இணைந்து காது, மூக்கு, தொண்டை இலவச மருத்துவ முகாம் திருச்சி அல்லிமால் தெருவில் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட அச்சக  உரிமையாளர்கள் சங்க தலைவர்  அப்பாஸ்  மற்றும் காகித வணிகர்கள் நல சங்க செயலாளர் ரஜினீஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் டாக்டர் தீபன் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்.

சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் மேல்சிகிச்சைக்காக மூன்று நபர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் வள்ளியப்பன் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட அச்சக உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளும், காகித வணிகர்கள் நல சங்கத்தின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்.சிராசுதீன்.

 

Leave a Reply