பள்ளி மாணவர்களுக்கு தமிழில் கையெழுத்திடும் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்ட தமிழ்ச்சங்கம் சார்பில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழில் கையெழுத்திடும் விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு செங்கம் வட்ட தமிழ்ச்சங்கம் தலைவர் தனஞ்செயன் தலைமை  தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் நளின லட்சுமி, தமிழாசிரியர்கள் பிரபாகரன், கோமதி மற்றும் தமிழ்ச்சங்க செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் மீரா வரவேற்று பேசினார். செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியை வாழ்த்தி பள்ளி துணை ஆய்வாளர் வெங்கடசுப்ரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சண்முகம், ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி மாணிக்கம், ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி மதியழகன் கலந்துகொண்டு பேசினார். அப்போது மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கமும் மிக அவசியம், ஒபாமா அதிகம் படித்தவரல்ல! ஒசாமா அதிகம் படித்தவர்! ஆனால், ஒபாமா அமெரிக்காவின தலைவரானார். ஒசாமா மிகபெரிய தீவிரவாதியானார். எனவே, கல்வி அறிவுடன் ஒழுக்கம், பண்பாடு முக்கியம் அதிலும் பெண்கள் வளர்இளம் பருவத்தில் மன சலனங்களுக்கு இடம்கொடுக்காமல், வாழ்க்கையில் முன்னேற வேண்டும். தமிழ் மொழியும் நமக்கு உயர் நிலையை கொடுக்கும். தாய் மொழியான தமிழில் கையெழுத்து போடும் பழக்கத்தை கொண்டுவரவேண்டும் என அவர் பேசினார்.

நிறைவாக ஆசிரியர் இரத்தினகயல் சாந்தசீலன் நன்றி கூறினார். தமிழ்ச்சங்க இணை செயலாளர் உதயசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

-செங்கம் சரவணக்குமார்.

Leave a Reply