அசோக சின்னம் பொறித்த கொடிகம்பத்தில் ஜான் போஸ்கோ உருவப்படம் பொறித்த கொடி!-ஏற்காட்டில் சர்சை.

சேலம் மாவட்டம், ஏற்காடு டவுன் பகுதியில் ரெட்ரீட் எனும் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு 4 சிங்கங்கள் அமைப்பு கொண்ட அசோக சின்னத்துடன் கொடிகம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று சுதந்திரத் தினத்தை முன்னிட்டு இத்தாலிய ரோமன் கத்தோலிக்கக் குருவும், கல்வியாளரும், 19-ஆம் நூற்றாண்டின் எழுத்தாளருமான ஜான் போஸ்கோ” என்பவருடைய உருவப்படம் பொறித்த கொடியை, அசோக சின்னம் பொறித்த அக்கொடிகம்பத்தில் கட்டி பறக்கவிட்டனர். இதனால் அங்கு பெரும் சர்சை உருவானது.

மேலும், ஏற்காடு டவுன் பகுதியை சேர்ந்த பாலு என்பவர், ஏற்காடு வட்டாட்சியரிடம் இது குறித்து புகார்  அளித்தார். இந்நிலையில், நேற்று காலை ஏற்காடு வருவாய் ஆய்வாளர் பெரியசாமி, கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் ஆனந்த் மற்றும் வருவாய் துறையினர் ரெட்ரீட் கல்வி நிறுவனத்திற்கு சென்று, அசோக சின்னம் பொறித்த கொடிகம்பத்தில், வேறு ஒரு கொடி கட்டியிருப்பது தவறு என சுட்டிகாட்டியதோடு, அந்த கொடிகம்பத்தில் பறந்து கொண்டிருந்த ஜான் போஸ்கோ” உருவப்படம் பொறித்த கொடியினை கழட்டி அகற்றினர்.

 -நே.நவீன் குமார்.

One Response

  1. MANIMARAN August 16, 2019 11:27 pm

Leave a Reply