ர(யு)த்த வெறி பிடித்து அலையும் பாகிஸ்தான்!-பயிற்சியில் ஈடுப்பட்டு வரும் பாகிஸ்தான் தாக்குதல் படைகள்…!

 

பாகிஸ்தான் இரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது.

இந்திய அரசாங்கத்தால், காஷ்மீர் அழிவின் விளிம்பில் உள்ளது எனவும், காஷ்மீர் விடுதலைக்காக இந்தியாபாகிஸ்தான் இடையே வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் முழு அளவில் போர் ஏற்படும் எனவும், அது தான் இரு நாடுகளிடையேயான கடைசிப் போராக இருக்கும் எனவும்எனவே, ஐநா தலையிட வேண்டும் என்றும் ராவல்பிண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் இரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், இந்திய படை வீரரை அவர் காலில் போட்டு இரத்தம் கக்க கக்க மிதிப்பதைப் போலவும், அவரது ட்டூவிட்டர் பக்கத்தில் கேலி சித்திரம் வெளியிட்டுள்ளார்.

இதை பார்க்கும்போது நம் இரத்தம் கொதிக்கிறது; நெஞ்சம் பதைக்கிறது.

பாகிஸ்தான் பிரதமரின் அனுமதி இல்லாமல், ஒரு அமைச்சர் இப்படி பேச முடியுமா? வன்முறையை தூண்டுமளவிற்கு கேலி சித்திரம் வெளியிட முடியுமா? இப்படி ர(யு)த்த வெறி பிடித்து அலையும் பாகிஸ்தான் கொட்டத்தை யார் தான் அடக்குவது?

காஷ்மீர் பிரச்சனை என்பது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை, இதில் தலையிட பாகிஸ்தானுக்கு என்ன உரிமை இருக்கிறது?

காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த விதத்தில், விவகாரத்தில், ஆயிரம் குறைபாடுகள், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அது இந்தியாவின் குடும்ப தகறாறு. அதை நாங்கள் பேசி தீர்த்து கொள்வோம். இதைக் கண்டு பாகிஸ்தான் பதட்டமடைய வேண்டிய அவசியம் என்ன?

உலக முழுவதும் உள்ள தீவிரவாதிகளின் ஒட்டு மொத்த கூடாரமாக பாகிஸ்தான் திகழ்கிறது. இதை ஐக்கிய நாட்டு சபை அங்கத்தினர்கள் கைக்கட்டி, வாய் பொத்தி வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கிறார்கள். 

ஐக்கிய நாட்டு சபை அங்கத்தினர்களின் இந்த கள்ள மவுனம், கால் நீட்டி வம்பு இழுக்கும் பாகிஸ்தானின் காட்டுமிராண்டித்தனத்தை அங்கீகரிப்பதை போல உள்ளது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

பயிற்சியில் ஈடுப்பட்டு வரும் பாகிஸ்தான் தாக்குதல் படைகள்…!

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply