சிபிஐ அதிகாரிக்கு லஞ்சம் தருவதாக பேரம் பேசிய மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ரூ.16 லட்சம் லஞ்சம் பணத்துடன் கைது!

மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணையில் சிக்கியுள்ள தனிநபரை காப்பாற்ற, சிபிஐ விசாரணை அதிகாரியிடம் லஞ்சம் தருவதாக பேரம் பேசிய மத்திய உள்துறை அமைச்சகத்தில் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பான பணிகளை கவனித்து வரும் தீரஜ்குமார் சிங் என்ற ஐ.பி.எஸ். அதிகாரியை, ரூ.16 லட்சம் லஞ்ச பணத்துடன், சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

தீரஜ்குமார் சிங். ஐ.பி.எஸ்.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ள தீரஜ்குமார் சிங். ஐ.பி.எஸ்.

அதிகாரத்தைப்பயன்படுத்தி சிபிஐ உடன் எந்தவொரு விசாரணை விஷயங்களையும் தீர்க்க முயற்சிக்க வேண்டாம் என்றும், வழக்குகளை முடித்து தருவதாக முன்வரும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என்றும், மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN September 13, 2019 4:11 pm

Leave a Reply